- °C
Are You a business owner?
List Your Business / ADடல்லாஸ்,
டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான்- அமெரிக்கா அணிகள் (ஏ பிரிவு) மோதின. இதில் டாஸ் ஜெயித்த அமெரிக்க கேப்டன் மோனக் பட்டேல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 44 ரன்களும், ஷதப் கான் 40 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய அமெரிக்காவும் 20 ஓவர்களில் 159 ரன்கள் அடிக்க ஆட்டம் சூப்பர் ஓவர் வரை சென்றது. சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தி அமெரிக்கா வெற்றி பெற்றது.
முன்னதாக பாபர் அசாம் இந்த ஆட்டத்தில் அடித்த 44 ரன்களையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 4067 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற விராட் கோலியின் மாபெரும் சாதனையை தகர்த்த அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:
1. பாபர் அசாம் - 4067 ரன்கள்
2. விராட் கோலி - 4038 ரன்கள்
3. ரோகித் சர்மா - 4026 ரன்கள்
Copyrights © 2024 . All rights reserved. Powered by ♥ Redback
Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Redback IT solutions. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.